இலங்கை – காரைநகர் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30,35 மற்றும் 57 வயதுகளுடைய மீனவர்களே இவ்வாறு கைதாகினர்.
இதன்போது அவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்கு உபயோகித்த IND-TN-11-MM 108 என்ற இலக்கம் கொண்ட படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைகளுக்காக மைலிட்டி கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.