இலங்கையில் 15 மணி நேரம் நாளாந்தம் மின்வெட்டு அமுல் ஆகக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தற்பொழுது மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் இல்லை.
இந்த நிலைமை சீர் செய்யப்படாவிட்டால் எதிர்வரும் காலங்களில் 15 மணி நேரம் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.