நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்குள் நாட்டை முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக இந்த யோசனை சமர்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் மின்வெட்டு காரணமாக பாடசாலை மாணவர்களும், வர்த்தக நிலையங்களும் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றன.
இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு கண்ட பின் நாட்டை திறக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை அரசாங்கம் இதுவரை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.