யுக்ரைன் கிவ் மற்றும் வடக்கு நகரமான செர்னிஹிவ் ஆகியவற்றில் போர் நடவடிக்கைகளை பாரியளவில் குறைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், களத்தில் என்ன நடக்கிறது என்பதை “பார்ப்போம்” என கூறியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சனும், “எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”என்று வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவை வார்த்தைகளால் அன்றி, அதன் செயல்களாலேயே மதிப்பிட வேண்டும் என்றும் கூறினார்