இந்தியாவிடம் இருந்து 750 ஜீப் வண்டிகளை காவல்துறைக்காக அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று கட்டங்களாக சலுகை தவணை அடிப்படையில் இந்த வாகனங்களை இந்தியா வழங்குகிறது.
அவற்றுக்கான கடன் தொகை 2.5 பில்லியன் டொலர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.