Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு“ஏப்ரல் 3, மாலை 3 மணிக்கு மக்கள் புரட்சிக்கு தயாராகுங்கள்”

“ஏப்ரல் 3, மாலை 3 மணிக்கு மக்கள் புரட்சிக்கு தயாராகுங்கள்”

தற்போது நாட்டில் பத்து மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. எரிபொருள் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

எதிர்வரும் 5ஆம் திகதி வரை எரிபொருள் இருக்காது என அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.

நாட்டு மக்கள் தமது உரிமைகளுக்காக ஏப்ரல் 3 ஆம் திகதி மாலை 3 மணிக்கு போராட்டம் நடத்தவுள்ளதாக சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப்பிலும் ஒரு பதிவு பகிரப்படுகிறது.

அதில் உள்ளடங்கும் விடயங்கள்

அரசியல் பயனற்றது. அரசியலமைப்பு ரீதியாக இந்த ஆட்சி மாறுவதற்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும். அதுவரை பொறுத்தால் நாடு மிஞ்சாது. வேறொன்றும் செய்வதற்கு இல்லை. ஏப்ரல் 3ம் திகதி மாலை 3 மணிக்கு நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த போராட்டத்தை நீங்களும் நானும் ஏற்பாடு செய்துள்ளோம். நாம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அரசியல் கருத்து இருக்க முடியும். அப்படியே வைத்துக் கொள்வோம். ஆனால் இம்முறை வாழ்க்கையைப் பற்றிய ஒரு கேள்வி நமக்கு இருக்கிறது. நமக்காகவும், நம் நாட்டிற்காகவும், நம் எதிர்காலத்திற்காகவும் வீதிக்கு இறங்குவோம்.

நாம் பல வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளோம். உங்கள் நகரத்துடன் தொடர்புடைய குழுவில் சேர இந்த இணைப்பைப் பின்தொடரவும். போராட்டம் நடக்கும் இடங்களை தொடர்பில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

எல்லோரும் உங்கள் கைப்பட எழுதிய போஸ்டரை கொண்டு வாருங்கள்.

அந்த போஸ்டர்களில் அரசியல் கட்சியின் பெயரை குறிப்பிட வேண்டாம். இது ஒரு அரசியல் கட்சியின் செயல் அல்ல.

உங்களுக்குத் தெரிந்த அனைவரையும் அழைத்து வாருங்கள்.

குழந்தைகளையும் அழைத்து வாருங்கள். உங்கள் பிள்ளைகளின் உரிமைகளுக்காக தவறுகளுக்கு எதிராக போராட கற்றுக்கொடுங்கள். முதுகெலும்புடன் வாழ குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

போராட்டம் என்பது குற்றம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த வாட்ஸ்அப் குழுக்களில் நாசகாரர்கள் இணையலாம். தளராதீர்கள்

எவ்வாறிருப்பினும், ஏப்ரல் 3 ஆம் திகதி, மாலை 3 மணிக்கு, மக்கள் போராட்டம் ஆரம்பமாகும்.

மக்கள் வீதிக்கு வருவதை கண்டு அரசாங்கங்கள் அஞ்சுகின்றன. இது நமக்கு நகைச்சுவையாக இருக்கும் வரை அவர்கள் கவலைப்படுவதில்லை. நினைவில் கொள்ளுங்கள், ஏப்ரல் 3, மதியம் 3 மணிக்கு.

“ஒரு யுகத்தின் முடிவை தீயவர்களின் நடவடிக்கைகள் மட்டும் அல்ல, நல்லவர்களின் மௌனம் கூட தீர்மானிக்கலாம்”

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles