Saturday, November 1, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் இல்லையென்றால் என்னை தொடர்பு கொள்ளவும் - வலுசக்தி அமைச்சர்

எரிபொருள் இல்லையென்றால் என்னை தொடர்பு கொள்ளவும் – வலுசக்தி அமைச்சர்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் தமக்கு அறிவிக்குமாறு வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (29) கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தம்மை தொடர்பு கொள்ளுமாறு அமைச்சர் தனது தொலைபேசி இலக்கத்தையும் ஊடகவியலாளர்களிடம் முன்வைத்தார்.

இதன்படி, 077-7414241 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும், பிரச்சினைக்கு தீர்வுகாண தாம் தலையிடுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles