750MW மின்சாரத்தை உற்பத்தி செய்ய போதுமான எரிபொருள் கிடைக்காததால், இன்று (30) 10 மணி நேரத்திற்கு மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (30) ABCDEF ஆகிய பிரிவுகளில் பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரம் மின் தடை அமுலாகும்.
GHIJKL ஆகிய பிரிவுகளில் காலை 8 மணி முதல் 2 மணி வரை 6 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 4 மணி நேரமும் மின் தடை அமுலாகும்.
PQRS பிரிவுகளில்- பிற்பகல் 2 முதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணி நேரம், மின் தடை அமுலாகும்.
TUVW பகுதிகளில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரையில் 6 மணி நேரமும், பின்னர் மாலை 6 மணி முதல் 10 மணி வரையில் 4 மணி நேரமும், MNOXYZ ஆகிய பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 10 மணி நேரமும் மின் தடை அமுலாகும்.