மின்வெட்டு, டொலர் நெருக்கடி மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக உள்ளூர் உற்பத்தி ஆடைகளின் விலை 40 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஷ குமார இதனை தெரிவித்தார்.
மஹரகம பமுனுவ ஆடை சந்தையில் 200 ரூபா முதல் 300 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட ஆடைகளின் விலை 800 ரூபா தொடக்கம் 1000 ரூபா வரை அதிகரித்துள்ளது.
ஆடை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
மேலும், நாளாந்தம் 8 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், சிறிய அளவிலான ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் பாரிய நஷ்டத்தை ஈட்டி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.