மருத்துவ உபகரணங்களின் விலை சுமார் 29 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சகல சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரந்த இதனைத் தெரிவித்தார்.
நேற்று (28) முதல் மறு அறிவித்தல் வரை வைத்தியசாலையில் சகல சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.