வங்கிகள் நிர்ணயிக்கும் மாற்று விகிதங்களை மீறி, அதிக விகிதங்களை வெளிநாட்டு நாணயங்களுக்கு வழங்கும் நாணய மாற்றுபவர்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
உரிமம் பெற்ற வங்கிகள் நிர்ணயித்துள்ள விகிதங்களுக்கு அப்பால் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் அவர்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்படும்/ ரத்து செய்யப்படும் என்று பணம் மாற்றுபவர்களுக்குத் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணம் மாற்றுபவர் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் அதிக மாற்று விகிதங்களை வழங்கினால், பின்வரும் தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் அறியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
தொலைபேசி : 0112398523
0112398827
0112477375
0112398568
மின்னஞ்சல் : [email protected]