பங்களாதேஷிடம் இருந்து இலங்கை மேலும் 250 மில்லியன் டொலர்களை நாணய பரிமாற்று ஒப்பந்த அடிப்படையில் கடனாக கேட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் ஏ. கே. அப்துள் மோமன் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த கடன் தொகையை வழங்குவது குறித்து பங்களாதேஷ் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.