ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான நேருக்கு நேர் பேச்சுவார்த்தையின் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்பூலில் நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்காக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் அங்கு சென்றுள்ளனர்.
ரஷ்யாவை போர்நிறுத்தம் செய்ய சம்மதிக்க வைப்பதே தமது முதன்மை நோக்கம் என யுக்ரைன் கூறியுள்ளது.
யுக்ரைன் எந்த வகையிலும் நேட்டோவில் சேரக்கூடாது என்பதே ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.