யுக்ரைன் – ரஷ்ய சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மூவரின் உடலில் விஷம் தொற்றியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ரஷ்ய தொழிலதிபர் மற்றும் யுக்ரைன் பிரதிநிதிகள் இருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது அவர்கள் சொக்லேட் மற்றும் தண்ணீரை மட்டுமே நுகர்ந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் ரஷ்யா மௌனம் காத்து வருவதுடன், இது தொடர்பில் அவர்கள் எவ்வித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.