நாட்டில் மேலும் 4 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (28) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,469 ஆக அதிகரித்துள்ளது.