மதுபோதையில், வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைதான நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நீதிமன்றில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கமைய, சந்தேக நபரான பணிப்பாளர் இன்றைய தினம் நுவரெலிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 1,500 ரூபா அபராதத்தை செலுத்தியதன் பின்னர், அவரது சாரதி அனுமதிப்பத்திரம் விடுவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கடந்த 27 ஆம் திகதி தலவாக்கலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.