எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வெளியாகவுள்ள தி வீக் இன்டர்நேஷனல் வாராந்திர இதழின் அட்டைப்படம் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அந்த இதழின் 20 பக்கங்கள் இலங்கையில் காணப்படும் நெருக்கடிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கை அரசின் பொறுப்பற்ற பொருளாதார நடவடிக்கைகள் குறித்து அதில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத் தரவுகள் விளக்கப்படங்களைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டு, இது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என்பது உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் துன்பங்கள் குறித்த இரண்டு சிறப்புக் கட்டுரைகள், அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரின் இரண்டு நேர்காணல்களுடன், ராஜபக்ஷ ஆட்சி, பசில் மோடியின் மறைக்கப்பட்ட கதை, மற்றும் இந்தியாவின் தொடர்பு உள்ளிட்ட பல கட்டுரைகளுடன் இலங்கையின் நெருக்கடி தொடர்பில் விவரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சர்வதேச வெளியீடுகள் மூலம் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை உலகிற்குச் சொல்லும் செய்தி நல்லதல்ல. இது எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த இதழில் வெளியிடப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் கிராஃபிக் வடிவமைப்புகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.