பேராதனை போதனா வைத்தியசாலையின் சகல சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடுகளே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.
இந்த செய்தி குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மன வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் உதவக்கூடிய வழிகளை ஆராயுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை அறிவுறுத்தி இருப்பதாக அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.