பேராதனை போதனா வைத்தியசாலையில் வழமையான சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட தீர்மானம் மீளப்பெற்றுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களை விநியோகிக்க மருத்துவ வழங்கல் பிரிவு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதனை அடுத்து இடைநிறுத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பமாகும் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.