நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என விவசாயப் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைகள் நடைபெற்று வருகிறது.
அறுவடையில் சிறிதளவு வீழ்ச்சி காணப்பட்டாலும், கடந்த காலங்களில் பெறப்பட்ட அரிசியின் அளவு காரணமாகப் பண்டிகைக் காலத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது.
பச்சைப்பயறு, கௌபீ மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன.
தற்போதைய டொலர் நெருக்கடியால் சில உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது எனப் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.