Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணி இடைநிறுத்தம்

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணி இடைநிறுத்தம்

வாகன சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அட்டைகளுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அட்டைகளை கொள்வனவு செய்ய டொலரில் கொடுப்பனவை மேற்கொள்ள வேண்டும் எனவும், நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக குறித்த நிறுவனங்களால் எமக்கு அட்டைகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது இதற்காக நாம் தற்காலிக டிஜிட்டல் அனுமதிப்பத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனை 6 மாதங்களுக்குள் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு அனுப்ப எதிர்பார்கிறோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles