உடற்தகுதியை காரணம் காட்டி இலங்கை அணியில் இருந்து பானுக ராஜபக்ஷ நீக்கப்பட்டிருந்தார்.
ஆனால் நேற்று (27) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடி தன்னை நிரூபித்து காட்டியுள்ளார்.
இந்த போட்டியில் அவர் 22 பந்துகளுக்கு 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
அவரது துடுப்பாட்டத்தின் மூலம் போட்டியை திசை மாற்றியதன் மூலம் பானுக ராஜபக்ஷ தம்மீதான விமர்சகர்களுக்கு சிறந்த பாணியில் பதலளித்துள்ளார் என இன்சைட்ஸ்போர்ட்ஸ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.