டொலருக்கு நிகரான இலங்கையின் ரூபா பெறுமதி இந்த வருடத்தில் மாத்திரம் 26 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடன் செலுத்துகைகள் மற்றும் எரிபொருள் விலையேற்றம் இரண்டையும் சமநிலையில் பேணாமையே இதற்கான காரணம் என்று, ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலைமைக்கு தீர்வாக இலங்கை, 1884-1950 வரையில் கொண்டிருந்த நாணய சபை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.