தென் பாதாள குழு உறுப்பினரான பெகியா என்பவரின் உதவியாளர்கள் இருவர் எல்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 12 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் இருவரும் வெவ்வேறு பகுதிகளில் வைத்து ஹேரோயினுடன் கைதாகினர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (25) எல்பிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.