தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ நேற்று (24) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.
அமைச்சின் உத்தரவை தொடர்ந்து மீறுவதால் அவரது உத்தியோகபூர்வ அறையை சீல் வைத்து உத்தியோகபூர்வ காரை கையகப்படுத்துமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, பணிப்பாளர் நாயகத்தின் விஜயத்தின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக ரிதியகம சஃபாரி பூங்காவில் கால்நடை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.