ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது நான்கு முக்கியமான விடயங்களில் இணக்கம் காணப்பட்டது.
அதன்படி,
01 .காணாமல் போனோரின் உறவினர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 100,000 ரூபா முழுமையான நட்டயீடு அல்ல என ஜனாதிபதி விளக்கமளித்ததுடன் – பின்னர் காணாமல் போனோர் குறித்த விசாரணை இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
02. வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதியம் உருவாக்கப்பட்டு புலம்பெயர்ந்தோர் நிதியை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
03. இராணுவத் தேவைக்காக மேலும் காணிகள் சுவீகரிக்கப்படாது – இனப்பரம்பலை மாற்றும் வகையிலான எல்லை நிர்ணயங்கள் இடம்பெறாது – ஜனாதிபதி உறுதி
04 .நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர்.
இவை அனைத்தும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னர் அமுலாக்கப்படும் என இணக்கம் காணப்பட்டது.
05. ரொமேஸ் டி சில்வா ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் இரண்டு மாதங்களில் கிடைக்கும் எனவும் அதன் அடிப்படையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.