அவசர தேவைக்காக 40,000 மெட்ரிக் டன் டீசலை அனுப்புமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்றுள்ள இந்தியா, குறித்த டீசல் தொகையை கப்பலேற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 500 மில்லியன் டொலர் கடன் எல்லை ஒப்பந்தத்துக்கு மேலதிகமாக இந்த டீசல் தொகை வழங்கப்படுகிறது.
ஆனால் இது எப்போது இலங்கைக்கு கிடைக்கும் போன்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.