கடவத்தை 9 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு (24) இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேலியகொட பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், கடவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.