சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து மஹேந்திரசிங் தோனி விலக தீர்மானித்துள்ளார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம். எஸ். தோனி தலைவர் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளார்.
எனினும், இந்த தொடரில் மட்டுமல்ல இதற்கு பிறகும் தோனி சென்னை அணியில் தொடர்ந்து இடம் பெறுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.