சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் வலயத்தின் தலைவர் சாங்யோங் ரீ (Changyong Rhee) தமது பதவியிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
தென் கொரியாவின் மத்திய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் வலயத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தென் கொரிய பொருளாதாரத்தில் உயர் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்களை கட்டுப்படுத்த அனுபவம் வாய்ந்த அதிகாரி ஒருவரின் சேவை தேவைப்படுவதால், முன்னாள் IMF தலைவரை நியமிக்க தென் கொரியா தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.