வங்கி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொது மக்களுக்கும் ஏனைய அனைத்து பங்குதாரர்களுக்கும் வங்கி கட்டமைப்பு ஸ்திரத்தன்மையில் உள்ளதாக நிதியமைச்சும் இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கிறது.
அத்துடன், அரசாங்கத்துக்கு சொந்தமான வங்கிகளின் செயற்பாடுகள் சீராக இயங்குவதை உறுதிசெய்ய விரும்புவதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் நம்பப்படுகிறது.