Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உலகம்ஆப்கான் மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை

ஆப்கான் மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை

ஆப்கானிஸ்தானில் 6ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்பதற்கு மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மீள திறக்கப்பட்ட அனைத்து பெண்கள் உயர்நிலை பாடசாலைகளும் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 07 மாதங்களுக்கு பின்னர் முதல்தடவையாக மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள் சில மணித்தியாலங்களில் நேற்று(23) மூடப்பட்டுள்ளன.

இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கானிய கலாசாரத்தின் படி ஒரு திட்டம் வரையப்படும் வரை பெண்களுக்கான பாடசாலைகள் மூடப்படும் என அந்நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தலிபான் ஆட்சியாளர்கள் பாடசாலை மாணவிகளுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, நேற்று முன்தினம் புதிய அறிவிப்பொன்றை வௌியிட்டிருந்தனர்.

குறித்த அறிவிப்பில் மாணவிகள் 6ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், அடுத்த சில மணித்தியாலங்களில் தலிபான்கள் இந்த தீர்மானத்தை மாற்றியுள்ளனர்.

இதனையடுத்து 6ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்க மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles