2002 ஆம் ஆண்டு 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (VAT) சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதிக்கப்பட்டது.
இதற்கமைய 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதிச் சேவை வழங்கலுக்குப் பெறுமதி சேர் வரி 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்படும்.
இதற்கு மேலதிகமாக எந்தவொரு தொற்றுநோய் சூழல் அல்லது மக்களுக்கான அவசர சூழலின் போது அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்படும் வைத்திய உபகரணங்கள் மற்றும் ஓளடத நன்கொடைகளுக்கு மாத்திரம் பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிப்பு வழங்குவதற்கான ஏற்பாடும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.