இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு தேவையான டீசலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போக்குவரத்து அமைச்சிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.