தலவாக்கலை லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக சந்தன பிரதீப் குணதிலக்க தெரிவாகியுள்ளார்.
இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராவார்.
முன்னாள் தலைவரான அசோக சேபால அண்மையில் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
அதற்கமைய, தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உபதலைவராக பதவி வகித்த லெட்சுமன் பாரதிதாஸன் தற்காலிக தலைவராக தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
இந்நிலையில், அந்நகர சபையின் புதிய தலைவராக சந்தன பிரதீப் குணதிலக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.