Monday, October 27, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்யுக்ரைனை ஆதரிக்கும் இளவரசர் வில்லியம்

யுக்ரைனை ஆதரிக்கும் இளவரசர் வில்லியம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகிய இருவரும் கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக செவ்வாய் (22) அவர்கள் பெலீஸ் நாட்டுக்கு சென்றனர்.

அங்கு தலைநகர் பெல்மோபனில் உள்ள இங்கிலாந்து இராணுவ பயிற்சி மையத்துக்கு இளவரசர் வில்லியம் நேரில் சென்று இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் ரஷ்யாவின் உக்கிரமான போரை எதிர்கொண்டு வரும் யுக்ரைனுக்கு மரியாதை செலுத்தினார்.

அங்கு பேசிய அவர், யுக்ரைனை பாதுகாக்க போராடி வரும் இராணுவ வீரர்கள் மற்றும் அந்த நாட்டு மக்களுடன் தான் ஒன்றாக துணை நிற்பதாக கூறினார்.

மேலும் ஜனநாயகத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்ததுடன், யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கண்டிக்கும் நாடுகளுடன் பெலீஸ் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles