உலக சந்தையில் எரிபொருட்களின் விலை பாரியளவில் குறைவடைந்தால், உள்நாட்டிலும் அதன் விலையைக் குறைக்கத் தயர் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட அவர், கடந்த பெப்ரவரி மாதம் இருந்த விலையின் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
யுக்ரைன் யுத்தம் காரணமாக, மார்ச் மாதத்தில் சர்வதேச சந்தையில், எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலர் வரை அதிகரித்தது.
ஆனால், தற்போது சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும், பெருமளவில் விலை குறைப்பு இடம்பெற்றால், தாங்களும் விலை குறைப்பை செய்யத் தயார் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.