சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்ட 350 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றபட்டுள்ளது.
பனாமாவில் இருந்து இந்தியாவிற்கு மீள் ஏற்றுமதிக்கான இரும்பு பொருட்கள் எனக் குறிப்பிட்டு போலியான ஆவணங்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து குறித்த ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இந்த கொகேய்னின் சந்தைப் பெறுமதி 6,000 மில்லியன் (600 கோடி) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொகேய்ன் போதைப்பொருள் தொடர்பில் இலங்கை சுங்கத்தின் விசேட விசாரணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
.