Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவுக்கு அகதிகளாக படையெடுக்கும் இலங்கையர்கள்

இந்தியாவுக்கு அகதிகளாக படையெடுக்கும் இலங்கையர்கள்

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மேலும் 10 பேர் ஏதிலிகளாக சென்றுள்ளனர்.

வவுனியாவில் வசித்துவந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த, 5 சிறுவர்கள், 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என 10 பேரே தமிழகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தமது சொந்த கண்ணாடி இழைப்படகில் அவர்கள் பயணித்துள்ளனர்.

இதன்படி, நேற்றைய தினத்தில், இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக சென்றவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாகவே, தாங்கள் புகலிடம் கோரி இந்தியாவுக்கு சென்றதாக தமிழகம் சென்ற இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு எதிராக வெளிநாட்டுப் பிரஜைகள் சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles