Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவிலும் எரிபொருள் - எரிவாயு விலைகள் உயர்வு

இந்தியாவிலும் எரிபொருள் – எரிவாயு விலைகள் உயர்வு

இலங்கையை தொடர்ந்து இந்தியாவிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளன.

இந்தியா – சென்னையில் 137 நாட்களுக்கு பின்னர் நேற்று (22) பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னையில் ஒரு லீட்டர் பெட்ரோல் இந்திய பெறுமதியில் 102.16 ரூபாவுக்கும், ஒரு லீட்டர் டீசல் 92.19 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, சென்னையில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 5 மாதங்களாக வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலை 917 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது 50 ரூபா உயர்த்தப்பட்டு 967 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles