ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி மாநாடு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றிருந்தது.
இதன்போது இடைக்கால பாதீடு ஒன்றை முன்வைப்பதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
நிவாரணம் வழங்கும் பாதீடாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் பல்வேறு நிவாரணங்களை மக்களுக்கு வழங்கவிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.