இலங்கை மின்சார சபையின் கீழுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தி மேலும் தடைபடும் என மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் நாட்டின் நீர்மின் உற்பத்தி மேலும் தடைபடும் என மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களில் பேண வேண்டிய குறைந்தபட்ச நீர்மட்டத்தை விடவும் நீர் மட்டம் குறைந்துள்ளது.
அதன்படி, காசல்ரீ, மவுஸ்ஸாகல, சமனல வெவ, கொத்மலை, விக்டோரியா மற்றும் ரந்தெனிகல ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளதால், நாட்டின் நீர்மின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படக்கூடும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.