இலங்கையில் இருந்து 6 பேர் ஏதிகளாக இந்தியாவில் புகலிடம் கோரியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகில் அவர்கள் ஆறுபேரும் அந்த நாட்டு கடலோர காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் ஆண் ஒருவரும் 2 பெண்களும் 3 குழந்தைகளும் அடங்குகின்றனர்.
குறித்த ஏதிலிகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.