இலங்கையில் சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு, இந்திய அரசாங்கத்திடம் இருந்து உதவித் தொகையினை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
குறித்த ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அதனை நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும், இந்தியாவின் பாரத் இலக்ரோனிக்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.