எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (21) இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், அந்த தொகையில் எரிபொருளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் கீழ்வருமாறு
*அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 1500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளது.
*எரிவாயு இறக்குமதிக்காக டொலர்களை வழங்குவதற்கு மத்திய வங்கி இணங்கியுள்ளது.
*எரிவாயு இறக்குமதிக்கான கடன் கடிதங்களை திறக்கும் நடவடிக்கைகள் செவ்வாய் ஆரம்பிக்கப்படும்.
*நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும்.