நிதிநெருக்கடி தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான உத்தியோகப்பூர்வ கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்துக்கு இலங்கை அனுப்பிவைத்துள்ளது.
திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இந்த கடிதத்தை அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்தமாதம் வொஷிங்டன் செல்லும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாணய நிதியத்தின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்த நிலையில், இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வொஷிங்கடன் செல்லும் பசில் ராஜபக்ஷ, உலக வங்கியின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.