மேல் மாகாண பாடசாலைகளில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டிருந்தன.
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான காகிதங்கள் இன்மையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த தினங்களிலேயே பரீட்சைகளை நடத்துவதற்கு மாகாண கல்விப் பணிமனை தீர்மானித்துள்ளது.
வினாத்தாள் அச்சிடுவதற்கான காகிதங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னர் தீர்மானிக்கப்பட்ட வகையில், எதிர்வரும் 29 ஆம் திகதி தவணை பரீட்சை நடத்தப்படவுள்ளது.