இலங்கை புதிதாக முன்வைத்துள்ள கடனுதவி கோரிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாக சீனாவின் இலங்கைக்கான தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
2.5 பில்லியன் டொலர் (1பில்லியன் கடன், 1.5பில்லியன் பொருள் கொள்வனவுக்கான கடன் வசதி) கடனுதவியை வழங்குமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
அது குறித்து சீனா தற்போது பரிசீலித்து வருகிறது.எந்த சூழ்நிலையிலும் இலங்கையை சீனா கைவிடாது.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை சீனா தன்னலத்துடன் மேற்கொள்ளவில்லை என்று சீனத்தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.