எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று அறிவித்தார்.