Friday, September 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோடிக்கணக்கான பணத்துடன் தப்பியோட முயற்சித்த யுக்ரைன் எம்.பியின் மனைவி

கோடிக்கணக்கான பணத்துடன் தப்பியோட முயற்சித்த யுக்ரைன் எம்.பியின் மனைவி

யுக்ரைனின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவி எல்லை வழியே ஹங்கேரி நாட்டுக்கு கோடிக்கணக்கான பணத்துடன் தப்பியோட முயற்சித்துள்ளார்.

எல்லை காவல் படையினர் சந்தேகத்தில் அவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது, குறித்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

யுக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினரான கொத்வித்ஸ்கியின் மனைவி, போர் சூழலை பயன்படுத்தி கொண்டு, வேறு நாட்டுக்கு தப்பி செல்லும் நோக்குடன் பயணப் பொதிகளில் முடிந்தவரை பணத்தை நிரப்பியுள்ளார்.

அதன் பின்னர், மக்களுடன் மக்களாக ஜக்கர்பாட்டியா மாகாணத்திற்கு வந்து யுக்ரைனுடனான எல்லை வழியே ஹங்கேரி நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார்.

அவரிடம் இருந்த பயணப்பொதிகளில் 28 மில்லியன் டொலர் மற்றும் 1.3 மில்லியன் யூரோ மதிப்பிலான பணம் இருந்தது.

இந்நிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவியிடம் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles